1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases increase in India

மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,527 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,54,952ஆக உயர்ந்தது.
 
மேலும் புதிதாக 33 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,149-ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,656 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,17,724-ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,079 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,87,46,72,536 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,13,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்