வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (18:48 IST)

20 கோடியில் போய்ஸ் கார்டனில் ஜெயம் ரவியின் புது வீடு – எப்படித் தெரியுமா ?

சென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி.

சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான்.

ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம்.

அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். தனது நீண்டநாள் ஆசைக்காக ஜெயம் ரவி இப்போது அந்தக் கம்பெனிக்கு வரிசையாக மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிக் டிக் டிக் மற்றும் அடங்கமறு ஆகியப் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.