வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (14:49 IST)

அடுத்த பெரிய பாய் சம்பவம் லோடிங்… காதலிக்க நேரமில்லை முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைப் படக்குழு ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த வீடியோவில் ஏ ஆர் ரஹ்மான் குரலில் இடம்பெறும் பாடல் துணுக்கையும் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஏ ஆர் ரஹ்மானின் தனிப்பட்ட விஷயம் சம்மந்தமாக ஒரு எதிரலை பரவிவரும் நிலையில், தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான ‘என்னை இழுக்காதடி’ நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.