1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (14:03 IST)

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த லோகேஷின் நண்பேண்டா ‘ரத்னகுமார்’!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. ஜெயம் ரவி தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர் ஏற்கனவே முன்பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு இன்னும் படம் நடித்துக் கொடுக்கவில்ல்லை என்ற குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டன.

இதற்கிடையில் ரவி சென்னையில்  இருந்து வெளியேறி நிரந்தரமாக மும்பையில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல அவர் சமீபகாலமாக மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் இப்போது இந்த படத்தில் எழுத்தாளராக இணைந்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.