வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (09:21 IST)

ஜெயம் ரவியின் கேரியரில் மோசமான வசூல்.. பிரதர் படத்தால் கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தர்கள்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தீபாவளிக்கு ரிலீஸான திரைப்படம் ‘பிரதர்’. இந்த படத்தில் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். அக்கா தம்பிக்கு இடையிலான உறவை சொல்லும் நகைச்சுவை படமாக பிரதர் வெளியானது. ஆனால் ரிலீஸுக்குப் பின்னர் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே படம் பெற்றது.

அதனால் வசூலில் படுமோசமாக பின்தங்கியது. இதுவரை ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் எந்த படமும் அடையாத படுதோல்வியாக பிரதர் படம் அமைந்துள்ளது. இந்த படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் லண்டன் கருணாவுக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவியின் திரைவாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக நேர்மறையாக செல்லவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தவிர வேறு எந்த படமும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் பிரதர் படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை. படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி என்ற பாடல் சென்சேஷன் ஹிட்டானது மட்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் ஒரு பாடல் மட்டும் படத்தின் வெற்றிக்குப் போதாது அல்லவா?