1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (09:13 IST)

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸில் மாற்றம்… இரண்டு மாதங்கள் தள்ளிவைப்பு!

ஜெயம் ரவி பூலோகம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் அகிலன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார். படம் 1980 மற்றும் நிகழ்காலம் இரண்டு கால கட்டங்களில் நடக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தை இரண்டு மாதங்கள் தள்ளி நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் விஷாலின் லத்தி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகும் என தெரிகிறது.