1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:38 IST)

யாஷிகாவை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்

பிக்பாஸில் சென்ட்ராயன், டேனி, யாஷிகாவை பாத்ரூம் கழுவவிட்ட தலைவியான ஜனனி ஐயரை பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒரு தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் போட்டிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு. அதில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவர்.
 
அதில் வெற்றி பெற்ற ஜனனி, மகத் மற்றும் மும்தாஜ் ஆகியோருக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அளித்த வாக்குகளில் 8 வாக்குகள் பெற்று ஜனனி முதல் தலைவராக தேர்வு பெற்றார். அவர்தான் இனி பிக்பாஸ் வீட்டில் யார்யார் எந்தெந்த வேலைகள் செய்ய வேண்டும் என முடிவு செய்வார்.
 
அதன்படி அவர் சென்ட்ராயன், டேனியை பாத்ரூம் சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். இதனை டேனியும், சென்ட்ராயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். அணியில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதால் யாஷிகா சென்ட்ராயன் அணிக்கு சென்றுவிட்டார்.
ஜனனி சென்ட்ராயன், டேனி, யாஷிகா ஆகியோரை பாத்ரூம் கழுவச் சொன்னது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஜனனி ஏதோ உள்நோக்கத்துடன் இப்படி செய்கிறார் என்று பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.