வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:37 IST)

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவர் ஜனனி தாக்கு பிடிப்பாரா?

பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒரு தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் போட்டிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு. அதில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவர்.
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் மூன்று கவர்கள் பெட்ரூம்களில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை தேடி கண்டுபிடிப்பவர்களே முதல் தலைவருக்கான போட்டியாளர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த கவர்களை ஜனனி ஐயர், மகத் மற்றும் மும்தாஜ் ஆகியோர் கண்டுபிடித்ததால் தலைவர் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
 
பின்னர் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அளித்த வாக்குகளில் 8 வாக்குகள் பெற்று ஜனனி முதல் தலைவராக தேர்வு பெற்றார். ஆனால் ஜனனி வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவராக இருப்பதால் அவர் தலைவராக தாக்குப்பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
தலைவர் பதவியை ஏற்றதும் செண்ட்ராயன் தலைமையிலான குழுவுக்கு பாத்ரூம் சுத்தம் செய்தல் பணியும், மும்தாஜ் தலைமையிலான குழுவுக்கு சாப்பாடு தயார் செய்யும் பணியும், அனந்து தலைமையிலான குழுவுக்கு பாத்திரம் சுத்தம் செய்யும் பணியையும் ஜனனி பிரித்து கொடுத்தார்.