1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 ஜூன் 2018 (21:38 IST)

பிக்பாஸ் பின்னணியில் நயன்தாரா பட இயக்குனர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்களே ஆன நிலையில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த இரண்டு நாட்களில் பெரிய சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி கூட டல்லடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதும் இதில் 16 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியை பின்னால் இருந்து இயக்குபவர் யார் என்று தெரியுமா?
 
திங்கள் முதல் வெள்ளி வரையிலான நிகழ்ச்சியை இயக்குபவர் இயக்குனர் ராஜ்குமார் என்பவராம். இவர் கவுதம் கார்த்திக் இயக்கிய 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கியவர். அதேபோல் கமல்ஹாசன் தோன்றும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள் நிகழ்ச்சிகளை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுசரி இந்த நிகழ்ச்சிகளை இயக்குனர் இயக்குகிறார் என்றால், எல்லாமே முன்கூட்டியே செட்டப் செய்வதுதானா? போட்டியாளர்கள் இயல்பாக பேசுவது இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல..
 
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனுக்கு மேக்கப் போடுபவர் அமெரிக்காவை சேர்ந்த கியூனா என்ற பெண் மேக்கப்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபம் படத்தில் இருந்து கமல்ஹாசனுக்கு மேக்கப் போடுபவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது