புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (15:09 IST)

ஜெய்பீமில் நடித்த சிறுமி பள்ளியை விட்டு நீக்கமா? – சமூக வலைதளங்களில் சர்ச்சை!

ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த சிறுமி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு பலரும் வாழ்த்துகளும், ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், பழங்குடி இன சிறுமியாக நடித்த சிறுமியின் கதாப்பாத்திரமும் வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமி படத்தில் நடித்த காரணத்தால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்து வரும் பிலோமின் ராஜ் அந்த செய்தி பொய்யானது என விளக்கமளித்துள்ளார்.