1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (11:49 IST)

பாதி கூட பாக்க முடியாதுன்னு நினைச்சேன்… ஆனா..? – ஜெய்பீம் பார்த்து வியந்த சூரி!

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சூரி அதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்று வெளியானது.

இந்நிலையில் அரசியல், திரை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் படத்தை பார்த்து வியந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த காமெடி நடிகர் சூரி “இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்சம் படம் பார்த்துவிட்டு மீதியை அடுத்த நாள் பார்க்கலாம் என நினைத்துதான் பார்க்க தொடங்கினேன். படம் முடிஞ்சும் எந்திரிக்க முடியலை. அப்படியே உறைந்து போனேன். ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை” எனக் கூறியுள்ளார்.