முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!
முகூர்த்த நாள், வார இறுதி நாட்களால் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் இன்று சென்னையிலிருந்து முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி இன்று இரவு 09.25க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் வழியாக காலை 5.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
அங்கிருந்து மறுமார்க்கமாக சிறப்பு ரயில் அறிவிக்கப்படவில்லை. இந்த ரயில் முழுவதும் முன்பதிவில்லா ரயில் என்பதால் மக்கள் அந்த சமயமே டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K