வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (21:22 IST)

’தனுஷின் ’ஜகமே தந்திரம்’’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் 3 வது சிங்கில் வெளியாகி இணையதளத்தில் வைரலான நிலையில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை 17 மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளார்களாம். தனுஷ் இப்போது ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிப்பதால் அவரை முன்னிறுத்தி இத்தனை மொழிகளில் டப் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி ஆகிய 2 பாடல்களும் ஹிட் ஆனதை அடுத்து 3 வது சிங்கில் நேற்று என்ற பாடலை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்று சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தி 3 வது சிங்கில்நேத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், இப்பாடல் 7 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படாலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் டிரைலர்  வரும் ஜூன் 1  ஆம் தேதி ரிலீஸாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராக்  தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் இதை டிரெண்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.