1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:59 IST)

அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கணும்… தனுஷ் ஐடியாவை கேட்டு அப்செட் ஆகும் தயாரிப்பாளரகள்!

நடிகர் தனுஷும் இயக்குனர் பிரபுதேவாவும் மிக நீண்டகாலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களைக் கைவசம் வைத்திருப்பது நடிகர் விஜய் சேதுபதியும், தனுஷும் தான். தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ் இந்தியா வந்ததும் வரிசையாக படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் தனது நண்பரும் நடன இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என நீண்டகாலமாக ஆசையோடு இருந்துள்ளார்.

இப்போது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என சில தயாரிப்பாளர்களிடம் அந்த திட்டம் பற்றி கூறி தயாரிக்க முடியுமா எனக் கேட்டுள்ளார். ஆனால் பிரபுதேவா சமீபகாலமாக இயக்கிய படங்கள் எல்லாம் ப்ளாப் ஆவதால் தயாரிப்பாளர்கள் தனுஷின் இந்த ஐடியா குறித்து மௌனம் காக்கின்றனராம்.