1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 26 மே 2021 (18:44 IST)

’’புதுப்பேட்டை- 15 ’’ தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்வெளியான புதுப்பேட்டை படத்தைக் குறித்து ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது தந்தை மற்றும் இவரது அண்ண செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வந்தார். பின்னர் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றி பெற்றார்.

இதில்,  காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தனுஷ், செல்வராகவன் இணைந்து பணியாற்றினர். இன்றளவும் இப்படங்கள்  ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இப்படத்தை செல்வராகவன் இயக்கினார். இப்படத்தின் தனுஷ் கொக்கி குமார் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில்,இப்படம் வெளியாகி இன்றுடம் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் கொக்கிகுமார் காதாப்பத்திரம் பற்றி ரசிகர்கள் கொண்டாடி டிரெண்டிங் உருவாக்கி வருகின்றனர்.