திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (15:10 IST)

"ஜோதிகாவின் தரலோக்கலான குத்து டான்ஸ்" வெளியானது ஜாக்பாட் பட பாடல் வீடியோ!

தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதோடு அதில் தொடர்ச்சியான வெற்றிகளை கொடுத்து வருகிறார். பெண்களின் சுதந்திரம் சமூக அக்கறை என ஹீரோவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி மாஸ் காட்டி வருகிறார். 


 
அந்தவகையில் ராட்சசி வெற்றி படத்தை தொடர்ந்து ஜோதிகா ஜாக்பாட்  படத்தில் நடித்து வருகிறார். கல்யாண் இயக்கம் இப்படத்தில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  யோகிபாபு, ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் குணசித்திர வேடங்ககளில் நடித்துள்ளனர். 
 
சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.  படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியதை அடுத்து இப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் shero என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் ஜோதிகா மற்றும் ரேவதி லோக்கலாக டான்ஸ் ஆடுகின்றனர். இப்பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது.