வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (17:45 IST)

நெட்பிளிக்ஸில் புதிய சாதனை படைத்த 'ஜவான்'

shah rukh  khan- jawan
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

இந்த படம் திரையரங்குகளின் மூலமாக சுமார் 1125 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 2 ஆம் தேதி இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று சாதனைப் படைத்து வருகிறது.

இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற  புதிய சாதனை படைத்தது ஜவான் படம்.

இப்படத்தை இதுவரை 1 கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்ரில் வசூல் குவித்ததுடன்,  நெட்பிளிக்ஸிலும் இப்படம் சாதனை படைத்துள்ளதால் படககுழு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.