வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (16:29 IST)

அஜித் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ! இயக்குனர் இவர்தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட ஷுட்டிங் தற்போது அஜர்பைனானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித்- கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான  படம் என்னை அறிந்தால். இப்படத்தின் போலீஸ் அதிகாரியாக அஜித்; அவருக்கு ஜோடியாக திரிஷா  நடித்திருந்தனர். இப்படத்தில் கேங்ஸ்டராக அருண்விஜய் நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. அஜித் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை கவுதம் மேனனே இயக்கவுள்ளதாகவும் இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அஜித்தின் சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.