1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மே 2022 (08:46 IST)

இணையத்தில் கவனம் ஈர்த்த அட்டகத்தி தினேஷ் ‘J பேபி’ டீசர்!

நடிகை ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கும் J பேபி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு J பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. முக்கியமாக டீசரில் ஊர்வசி சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.  கண்டிப்பாக ஊர்வசிக்கு பேர் சொல்லும் படமாக இது இருக்கும் என்று இப்போதே கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.