செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (18:00 IST)

அஜித்க்கு ஏற்ற மாஸான கதை ரெடி! ஆனால்... முருகதாஸ் ஓபன் டாக்

தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். இந்த படத்தில்தான் அஜித்துக்கு தல பட்டம் கிடைத்தது. இந்த தீனா படத்துக்கு பிறகு  முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் என அவரது மிகப்பெரிய வெற்றி படங்களில் வரிசை மிக நீளமானது. 


 
இந்திய சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக ஏஆர் முருகதாஸ் தற்போது திகழ்கிறார். 
 
இவர் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அஜித்துடன், தீனா படத்துக்குப் பிறகு ஒருமுறை கூட  இணையவில்லை.  சர்கார் படத்துக்குப் பிறகு  அஜித்தை வைத்து புதிய படம் இயக்கும் ஆசையில் முருகதாஸ் இருக்கிறார். தல அஜித்துக்கு ஏற்ற மாசான ஸ்கிரிப்ட் தன்னிடம் இருப்பதாக முருகதாஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
தனியார் இணையதள ஊடகத்துக்கு முருகதாஸ் அண்மையில் பேட்டி அளித்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் 
 
துப்பாக்கி படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது. 
ரஜினிகாந்தை சந்திப்பது என்பதே முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்த சந்தோஷத்தை போன்றது. அவரை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். கதை பிடித்திருப்பதாக சொன்னார். அழைப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
தன்னைப் பார்க்கும் ரசிகர்கள் அஜித்துடன் எப்போது பணியாற்றுவீர்கள் என்றுதான் அதிகம் கேட்கிறார்கள். தீனா படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி. ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அஜித்திடமே சொல்லிவிட்டேன். ரசிகர்களின் சந்தோஷத்திற்காகவே நல்ல ஒரு மாஸான படம் பண்ண வேண்டும் என்பதற்காக நல்ல ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன். அஜித் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அவர் அழைத்தால் உடனே ஆரம்பித்துவிடலாம்” என்று கூறியுள்ளார்.