செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (08:07 IST)

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விமல், விதார்த், பசுபதி? ஏன் தெரியுமா?

சென்னையில் நேற்று நடுரோட்டில் நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி உள்ளிட்ட பலர் குத்தாட்டம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் உடலநலக்குறைவால் காலமானார் என்பது தெரிந்ததே தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட பல  திறமையான கலைஞர்களை செதுக்கிய இந்த கலைஞரின் மறைவால் தமிழ்த்திரையுலகே சோகத்தில் ஆழ்ந்தது

இந்த நிலையில் மறைந்த தனது குரு முத்துசாமி அவர்களுக்கு கலை அஞ்சலி செலுத்த முடிவு செய்த  விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட நடிகர்கள் நேற்று முத்துசாமியின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்தின் முன் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினர். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.