செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (07:24 IST)

அரை நிர்வாணத்துடன் வெளிநாட்டு பெண்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு உடைகள் வாங்கி அணிவித்தனர்.

பின்னர் அவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் கேலா மரீன் நெல்சன் என்பதும் தெரியவந்தது. மேலும் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த விமல் என்பவர், அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு விமல் வேலையை இழந்ததால் அவருடைய மனைவி கேலா மரீன் நெல்சன், போதைக்கு அடிமையானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில், தன் மனைவி கேலா மரீன் நெல்சனை, விமல் இறக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது விமலை போலீசார் தேடி வருகின்றனர். கேலா மரீன் நெல்சன் ஒரு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.