செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (19:22 IST)

விஜய் சேதுபதியின் தெலுங்கு படம் இந்த தமிழ் படத்தின் காப்பியா?

விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள உப்பேன்னா என்ற தெலுங்கு படம் தமிழில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அப்படி அவர் தெலுங்கில் வில்லனாக நடிக்க ஓப்புக்கொண்ட திரைப்படம்தான் உப்பேன்னா. ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பஞ்சா வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும் அது 1981 ஆம் ஆண்டு கார்த்திக், ராதா மற்றும் தியாகராஜன் நடிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் காப்பி போல இருப்பதாக சொல்லி வருகின்றனர். அதை உறுதிப் படுத்துவது போலவே டிரைலரில் விஜய் சேதுபதியின் தோற்றமும் தியாகராஜனின் கதாபாத்திரத்தை ஒத்துள்ளது.