பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி - வனிதா வாழ்க்கையில் இன்னொரு இடி!
பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது திருமணம் குறித்து விமர்சித்த அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார்
அதில் குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, சூரியா தேவி, எலிசபெத் என தன்னை பற்றி விமர்சித்த அத்தனை போரையும் வனிதா கடுமையாக திட்டி தீர்த்தார். வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள். இருந்தும் இந்த பிரச்னை ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருந்த நிலையில் மீரா மிதுன் விவகாரம் வந்ததில் இருந்து வனிதாவை யாரும் நச்சரிக்கவில்லை. இதனால் நிம்மதியாக இருந்து வந்த வனிதாவுக்கு மேலும் ஓர் இடி விழுந்துள்ளது.
ஆம், வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும். உடனடியாக அவர் அருகில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.