வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:57 IST)

அப்பா விஜய்குமாருக்கு கை குழந்தையாக வாழ்த்து கூறிய வனிதா...!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில வருடங்களுக்கு  முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இது அவரது வாழ்க்கையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்ப்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், இன்று பிறந்தநாள் கொண்டாடும் மூத்த நடிகரும் வனிதாவின் அப்பாவுமான விஜயகுமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் "எனது தந்தையும், புகழ்பெற்ற புகழ்பெற்ற நடிகருமான ஆர்.விஜய்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். என்று கூறி கை குழந்தையாக அப்பாவுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.