வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:37 IST)

திருமணம் நிச்சயதார்த்தம் ரத்தா? முன்னணி நடிகை விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. இவர்  மெட்டி ஒலி சீரியல் இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் வெளியான  முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து, கொடைக்கானல்,  பகடை, விஷ்ணு, ஸ்ரீகாந்த்ஆகியோருடன் இணைந்து துரோகி , ஆடு புலி, கொடிவீரன்,காப்பான், அடங்கமறு உள்ளிட்ட பல படங்களில்   நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுகள் பெற்றார்.  மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து  நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  பூர்ணாவுக்கு சமீபத்தில் ஷானித் ஆசிப் அலி என்பவருடன்  நிச்சயதார்த்தம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு,  இந்த திருமணம் ரத்தானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் என் வருங்கால கணவர் ஷானித் ஆசிப் அலி என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.