புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (17:45 IST)

இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

anjali nair3
இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!
இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகைக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
ரஜினியின் அண்ணாத்த விஜய்சேதுபதியின் மாமனிதன் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் அனிஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார் 
 
அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜா என்பவருடன் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.
 
 எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வந்துள்ளார் என்றும் அவருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் தேவை என்றும் அஞ்சலி நாயர் பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது