இந்தியன் 2' படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கமா?

Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (08:41 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன்-2'
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அதன் பின்னர் வரும் ஆகஸ்ட் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட காஜல் அகர்வால், தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கால தாமதமாகி வந்த நிலையில், தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளை படக்குழுவினர் வீணடித்து விட்டதாகவும், அதனால் அந்த கால்ஷீட் தேதிகளுக்குரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் காஜல் அகர்வால் தரப்பில் முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு படக்குழுவினர் உடன்படவில்லை என்பதால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக ப்ரியா பவானிசங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
'இந்தியன்-2' படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் களறிப்பயிற்சியில் ஈடுபட்டு மிகுந்த ஆர்வத்துடன் நடிக்க காத்திருந்த நிலையில் அவர் திடீரென இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :