'அருந்ததி 2' படத்தில் நடிக்க மறுத்தாரா அனுஷ்கா?

Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (22:30 IST)
அனுஷ்கா என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது 'அருந்ததி' மற்றும் 'பாகுபலி' படங்கள் தான். இந்த இரண்டு படங்களிலும் அவரது கம்பீரமான நடிப்பு இன்னும் ரசிகர்களின் கண்ணுக்குள்ளே இருக்கும்
இந்த நிலையில் தற்போது 'அருந்ததி 2' படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்க 'அருந்ததி' படத்தை தயாரித்த அதே நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த படத்திற்கு இரண்டு வருடங்கள் கால்ஷீட் வேண்டும் என்றும், அதற்காக இதுவரை எந்த நடிகைக்கும் கொடுக்க முன்வராத மிகப்பெரிய தொகை கொடுக்கவும் அனுஷ்காவிடம் பேசப்பட்டதாம். ஆனால் அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது
தற்போது அனுஷ்கா 'சைலன்ஸ்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சிவீயின் 'சயிர நரசிம்மரெட்டி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு வருடங்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாது என்பதால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கன்வே 37 வயது ஆகிவிட்ட அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் ஒரு படத்தில் இரண்டு வருடத்திற்கு கமிட் ஆக வேண்டாம் என்பதே அனுஷ்காவின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதில் மேலும் படிக்கவும் :