திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (23:47 IST)

புதிய பேருந்துக்குள் ஒழுகியது மழைநீரா, ஊழலா? - கமல்ஹாசன் டுவீட்

திண்டுக்கல்லில் இருந்து அய்யம் பாளையம் செல்லும் பேருந்தில் மேற்கூரை சேதமடைந்திருந்தால், இன்று  பேருந்தினுள் மழை ஒழுகியது. இதனால் பயணிகள் பேருந்தினுள் அமர்ந்து குடை பிடித்தப்படி சென்றனர்.

இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில். புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.