திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (16:00 IST)

தாய்லாந்தில் படமாகும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம், தாய்லாந்தில் படமாகிறது.



 


‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் காமெடிப் படமான இதில், மீண்டும் கெளதம் கார்த்திக்கே ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோயினாக, வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார். இவர், சந்தானம் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். சென்னையில் 5 நாட்கள் ஷூட்டிங்கை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்கிறது. மீதமுள்ள காட்சிகள் அனைத்தும் அங்குதான் படமாக்கப்படுகிறதாம்.