திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (12:35 IST)

2 நிமிட காட்சிக்காக 4 நாட்கள் ரிகர்சல் செய்த கெளதம் கார்த்திக்

படத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சிக்காக 4 நாட்கள் ரிகர்சல் செய்துள்ளார் கெளதம் கார்த்திக்.

 
கலா பிரபு இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘இந்திரஜித்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படம்,  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சிக்காக, கெளதம்  கார்த்திக் மற்றும் வில்லன் சுதன்ஸு பாண்டே இருவரும் 4 நாட்கள் ரிகர்சல் செய்துள்ளனர்.
 
கிளைமாக்ஸில் இடம்பெறும் இந்தக் காட்சி, ஜீப் - பைக் சேஸிங். ஹைதராபாத்தில் இந்தக் காட்சியைப் படமாக்கியுள்ளனர்.  இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் 10 நாட்கள் உழைத்து ஒரே டேக்கில் எந்த கட்டும் இல்லாமல் படமாக்கி இருக்கின்றனர்.
 
மிக முக்கியமான விஷயம், இந்தக் காட்சியில் 13 மாதங்கள் கிராஃபிக்ஸ் ஒர்க் செய்துள்ளனர். அந்தக் காட்சி இயல்பாகத் தெரியவேண்டும் என்பதற்காக இத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டார்களாம். அதிக மழை பொழியும் இடமான சிரபுஞ்சி  மட்டுமின்றி, கோவா, கேரளா, மேகாலயாவிலும் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.