திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (15:37 IST)

சந்தானத்தின் அறிமுகப்பாடலுக்கு நடனம் அமைத்த 5 கொரியோகிராபர்கள்

சந்தானத்தின் அறிமுகப் பாடலுக்காக, 5 கொரியோகிராபர்கள் நடனம் அமைத்துள்ளனர்.

 

 

சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்தின் அறிமுகத்துக்காக ‘கலக்கு மச்சான் டெளலத்துல’ என்ற பாடலை எழுதியிருக்கிறார் ‘கானா’ ரோகேஷ்.

சிம்பு முதன்முறையாக இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், அறிமுகப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்காக 5 முன்னணி கொரியோகிராபர்கள் நடனம் அமைத்துள்ளனர். ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல் மற்றும் ஜானி ஆகியோர் நடனம் அமைக்க, பக்காவாக ஆடியிருக்கிறாராம் சந்தானம்.