வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 ஜூன் 2025 (10:12 IST)

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

இந்தப் படம் ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்துள்ளார். கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபத்த்தில் ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை அடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் முடங்கியுள்ளன. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்குவதாக இருந்த ‘சிம்பு 49’ படமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சிம்பு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம், தங்கள் பிரச்சனைகளை முடித்துவிட்டு வந்ததும் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு தற்போது அடுத்த படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.