1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (12:38 IST)

அர்ஜூன் அசத்தல் நடிப்பில் இரும்புத்திரை டிரெய்லர்

விஷால், அர்ஜூன், சமந்தா ஆகியோர் நடிப்பில் மே 11ஆம் தேதி வெளிவர உள்ள இரும்புத்திரை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

 
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் இரும்புத்திரை. திரையுலகினர் நடத்திய ஸ்டிரைக் காரணமாக இந்த திரைப்படம் வெளியாக தாமதமானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடல் படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்த அர்ஜூன் இந்த படத்திலும் அசத்தல் வில்லனாக மிரட்டியுள்ளார். விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி வைரலாகி உள்ளது.
 
டிரெய்லர் அசத்தலாக உள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.