திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:07 IST)

சமந்தா பிறந்தநாளுக்கு காமென் டிபி..

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் குடும்பத்தாரின் ஆதரவோடு தொடர்ந்து நடித்து வருகிறார்.
 
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் தமிழில் மூன்று படங்கள் காத்திருக்கிறது. அதே போல், அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
ஏப்ரல் 28 ஆம் தேதி சமந்தாவிற்கு பிறந்தநாள். இவரது ரசிகர்கள் சமந்தாவின் பிறந்தநாளை தற்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். 
 
இதற்காக டுவிட்டரில் சமந்தாவின் காமன் டிஸ்பிளே பிக்சரை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.