1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
  4. cobra vikrams new lookm released

கலர் கண்ணாடி போட்டு காலரை சிலிப்பிவிட்டு கெத்தா வந்திறங்கிய விக்ரம் - அட்டகாசமான கோப்ரா லுக்!

chiyaan vikram
விக்ரம் நடித்து வரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 7 விதமான வெவ்வேறு விக்ரம் கொண்ட அட்டகாசமான போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறாராம்.

இந்நிலையில் தற்ப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோப்ரா படத்தில் விக்ரமின் வித்யாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சியான் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். மஞ்சள் கலர் கண்ணாடி போட்டுகொண்டு, 80ஸ் காலத்து ட்ரெஸிங் ஸ்டைலில் முற்றிலும் வித்யாசமாக தோற்றமளிக்கும் விக்ரம் செம கெத்தாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
பிரபல பல் மருத்துவர் மறைவுக்கு ரஜினிகாந்த் சார்பில் இரங்கல்