வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (17:20 IST)

சம்பளத்தை குறைத்துக் கொண்ட விக்ரம் பட இயக்குநர்…

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களில் ஒருவர் ஞானமுத்து, இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்,  ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது எடுத்து வரும் கோப்ரா என்ற  படத்தை நடிகர் விக்ரம் – ஐ வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, போன்றோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டம் என்பதால், இன்னும்  25% படப்பிடிப்புகள் மீதமுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், படத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40% குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.