வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (14:05 IST)

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது.

அஸ்வின் 116 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் ஜெய்ஸ்வால் 59 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும்  வங்கதேச அணி 7 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. இந்திய தரப்பில் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்த, சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் மூன்று விக்கெட்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் பங்களாதேஷ் அணி விரைவில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.