வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:17 IST)

பரபரப்பாக நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்… ஒளிப்பதிவாளர் பகிர்ந்த புகைப்படம்!

இந்தியன் 2 திரைப்படம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டு வருகிறார்.

ஒரு மாதத்தில் 10 நாட்கள் என இந்த படத்துக்காக கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தேதியை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் தொடங்கி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் “படத்தை எப்படியாவது 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்” என இயக்குனர் ஷங்கரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் விறுவிறுப்பாக இந்தியன் 2 ஷுட்டிங் நடந்துவரும் நிலையில்  படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றைப் பகிர அது இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.