இந்தியன் 2 உண்மையிலேயே கைவிடப்பட்டதா? முதன்முதலாக வாய் திறந்த லைக்கா!

VM| Last Updated: புதன், 20 பிப்ரவரி 2019 (12:48 IST)
இந்தியன் 2 படத்தின் நிலை என்னவென்று முதன்முறையாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. 


 
சமீப நாட்களாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருப்பது விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த ‘வர்மா’ திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது தான். அந்தப்படம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்று e4 நிறுவனம் கைவிட்டது. தற்போது "ஆதித்யா வர்மா" என்ற புதிய டைட்டில் கொண்டு அந்த படத்தை புதிய இயக்குனர் எடுக்கவுள்ளனர். 
 
இதே போன்று கமல் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியில் கைவிடபட்டதாக சில தகவல்கள் வெளியாகி கோடம்பாக்கத்தில் முணு முணுக்கப்பட்டது. . இந்த படத்திற்கு ஷங்கர் சொன்ன பட்ஜெட் கட்டுப்படி ஆகாததால் படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பாதியிலேயே கைவிட்டது  என்று தகவல் பரவியது.
 
அரசியலுக்கு வந்துவிட்டதால் கமலின் கடைசி படம் இந்தியன் 2 தான் என  கூறப்பட்டநிலையில் இந்த படமும் தடைபட்டு போய்விட்டதே என்று கமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர். 
 
ஆனால், இந்த தகவலை தற்போது முற்றியிலுமாக மறுத்துள்ளது லைக்கா நிறுவனம், ஆம், இந்தியன் 2 படம் எதிர்பார்த்தபடி தயாராகி வருகிறது என்றும்  தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் நடைபெற இருக்கிறது என்றும் , அதற்கடுத்து கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :