ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 10 மே 2018 (17:24 IST)

‘விஸ்வாசம்’ படத்தில் ‘மெர்சல்’ பாட்டி

‘மெர்சல்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த பாட்டி, தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் நடிக்கிறார். 
விஜய் மூன்று வேடங்களில் நடித்த படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், இந்தப் படத்தின் பிளாஷ்பேக்கில், அதாவது வெற்றிமாறன் கேரக்டர் போர்ஷனில் ஒரு  பாட்டி நடித்திருப்பார். முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் அந்தப் பாட்டியின் கேரக்டர் பெயர் சிட்டுக்குருவி.
அந்தப் பாட்டி, தற்போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் அவர் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில்  வெளியாகியுள்ளது. சிவா இயக்கிவரும் இதன் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஹீரோயினாக  நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.