செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (10:44 IST)

விசுவாசம் படப்பிடிப்பு இன்று தொடக்கம்: தீபாவளிக்கு திரையிட திட்டம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டபோதிலும் இன்றுதான் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது.
 
கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று அஜித் உள்பட படக்குழுவினர் ஐதராபாத்திற்கு சென்றடைந்தனர். விமான நிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
 
ஆரம்பம் படத்திற்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாராவுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் போஸ் வெங்கட், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
 
டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் நடைபெறவுள்ளதாகவும், வரும் தீபாவளிக்கு இந்த படம் திரையிடப்படும் என நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.