திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (11:10 IST)

ஆரம்பமான அஜித்தின் விஸ்வாசம் படப்படிப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விசுவாசம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம்  படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது. 
ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், சிவா திரைக்கதைப் பணிகளை முடிக்காததால் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனக்  கூறப்பட்டது. பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குவதாக தகவல் வெளிவந்த நிலையில் அப்போதும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தமிழ்  திரையுலக ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டதால் படங்களின் ஷூட்டிங் பணிகள் தவிர்க்கப்பட்டன. அப்போதே ஐதராபாத்தில் 'விசுவாசம்' படத்திற்கு செட் போடப்பட்டது  குறிப்பிடத்தக்கது. 
தற்போது இன்று முதல் ஐதராபாத்தில் 'விஸ்வாசம்' படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இதற்காக, நேற்று அஜித் விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். ஐதராபாத் படப்பிடிப்புக்குப் பிறகு மும்பையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அஜித் ஐதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது இசையமைப்பாளர்  தமன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அஜித் விமானத்தில் அமர்ந்திருக்கும்  புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. நான்கு மாதங்களாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால் அஜித்  ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.