1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:04 IST)

பிக்பாஸ் வீட்டின் புது தலைவரான ஹரிஸ் கல்யாண்; நாமினேஷன் பட்டியலில் மூவர்!

பிக்பாஸ் வீட்டின் இந்த வார டாஸ்க்கில் வென்று ஹரிஷ் கல்யாண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'வந்தவுடனேயே தலைவரா" என்று பிந்து கிண்டலடித்தார். போட்டியில் வென்று வந்தாலும் தலைவருக்கான அணுகுமுறை ஹரிஷிடம் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் தலைவி பொறுப்பை சோகத்துடன் ஒப்படைத்தார் பிந்து.

 
பிக்பாஸ் வீட்டில் புது வரவான சுஜாவால் இனி அதிக பிரச்சினைகள் வரக்கூடும் என்று சிநேகன் கூறுகிறார். 'ஓவியா மாதிரி  நடிக்க டிரை பண்றா சுஜா என்றும், அது ரத்தத்துலயே இருக்கணும். நடிச்சால்லாம் வராது' என்கிறார் சிநேகன்.
 
இந்த வார நாமினேஷன் துவங்கியது. பட்டியல் சுருங்கியிருந்தாலும் இந்த முறைதான் நாமினேஷன் செய்யப்படுவதற்கான  காரணங்கள் துல்லியமாக வெளிப்பட்டன. இறுதியில் ரைசா, சிநேகன், வையாபுரி ஆகியோர்கள் இறுதியாக நாமினேஷனுக்கு  வந்திருக்கிறார்கள்.