திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2017 (19:06 IST)

ஆரவ்வை காப்பாற்ற அதிரடியாய் களமிறங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள் ப்ரொமோ வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி இறுதியாக வெளியேற்றப்பட்டார். இந்த வார புதிய தலைவராக ஹரிஸ் கல்யாண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் சினேகன், ரைசா, மற்றும் வையாபுரி ஆகியோர் நாமினேட் பட்டியலில்  உள்ளனர்.

 
இந்த நிலையில் இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து ஆரவ் சிலரால் காப்பாற்றப்பட்டார்.  ஆனால் இன்று வந்த புரொமோவில் பிக்பாஸ், ஆரவ் அடுத்த வாரம் எலிமினேஷ்னுக்கு நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று  கூறுகிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதில் நீங்கள் மூன்று பேர் தேர்ந்தெடுக்க  வேண்டும் என்றும், அவர்களுக்கு டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. அதில் மூவரும் நீச்சல் குளத்தில் மூழ்கி செய்வது போல்  உள்ளது. டாஸ்க் நடக்கும்போது காஜல் வழுக்கி நீச்சல் குளத்தில் வழுக்கி விழுவது போல், தற்போது பிக்பாஸ் ப்ரொமோ  வெளியிடப்பட்டுள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடுவில் என்ன நடந்தது எதனால் மீண்டும் ஆரவ் நாமினேட் செய்யப்படுகிறார் என்பது தெரியவில்லை. பொறுந்திருந்து பார்ப்போம். டாஸ்க்கின் முடிவில் ஆரவ் காப்பாற்றப்படுகிறாரா? இல்லையா? என்பதனை பார்ப்போம்.