வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (16:39 IST)

மழை இரவில் பிரபல இயக்குனருக்கு நடந்த மறக்கமுடியாத சம்பவம்…

பிரபல இயக்குனர், மழை நாள் இரவில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி, ராக் ஸ்டார், தமாஸா, ஹைவே போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மழை நாள் இரவில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோ அவரை நெருங்கி வந்துள்ளது. அந்த ஆட்டோவின் ஓட்டுநர் “ மழை பெய்கிறதே, நான் வேண்டுமானால் உங்களை கொண்டுபோய் விடட்டுமா?” என கேட்டுள்ளார். அதற்கு இம்தியாஸ், தன்னிடம் காசு இல்லை என பதிலளித்துள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர், பரவாயில்லை, மழையில் நீங்கள் குடையில்லாமல் நடந்து செல்கிறீர்கள். இப்படியே உங்களை விட்டுவிட்டுப்போக மனமில்லை. தயவு செய்து எனது ஆட்டோவில் ஏறுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு இம்தியாஸ் அலி ஆட்டோவில் ஏறியுள்ளார்.

இம்தியாஸ் அலி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு கார் அந்த ஆட்டோவை வழி மறித்து நின்றுள்ளது. அந்த காரில் இருந்து இறங்கிய தம்பதியர் இம்தியாஸுடன் செல்ஃபி எடுத்தனர். இதனையடுத்து இவர் ஒரு இயக்குனர் என ஆட்டோ டிரைவருக்கு தெரியவந்துள்ளது.

இதன் பிறகு இம்தியாஸ் அலியிடம் ஆட்டோ டிரைவர், செல்ஃபி எடுத்துக்கொள்ளட்டுமா என கேட்டுள்ளார். ஆனால் இம்தியாஸோ, “நீங்கள் என்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புகிறீர்கள், ஆனால் நானோ உங்களோடு செல்ஃபி எடுக்க விரும்புகிறேன்” என கூறி அந்த ஆட்டோ டிரைவருடன் செல்ஃபி எடுத்து கொண்டார். அந்த செல்ஃபி புகைப்படத்தை இம்தியாஸ் அலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.