வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:56 IST)

”எவ்வளவோ பண்றார், இத பண்ண மாட்டாறா?”… திருமணம் குறித்த பிரேம்ஜி அமரனின் பதிவு

நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு குறியீடுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவருக்கு திருமணம் ஆகப்போவதை குறிப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதர், இயக்குனர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இந்நிலையில் தற்போது இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு டி-சர்ட் அணிந்திருக்கிறார். அந்த டி-சர்ட்டில் ஒரு கல்யாண தம்பதியினரின் பொம்மை படம் அச்சிட்டுள்ளது. அந்த படத்தின் கீழே ”கேம் ஓவர்” (ஆட்டம் முடிந்தது) என எழுதியுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலமாக தனக்கு திருமணம் ஆகப்போகிறது என பிரேம்ஜி கூற வருகிறாரோ? என்று அந்த பதிவின் பின்னோட்டத்தில் கூறி வருகின்றனர். பிரேம்ஜியின் குறியீடு கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.