புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (10:55 IST)

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா ' குறித்து முக்கிய தகவல்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். 



அவர் கடைசியாக எடுத்த வடசென்னை ஆகிய படங்கள் வெற்றிகரமாக வசூலை வாரி குவித்தது. இதனால் உற்சாகத்தில் உள்ள தனுஷ் ரசிகர்கள்,கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா ' எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தனுஷுடன் மேகா ஆகாஷ் சசிகுமார் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் post-production மற்றும் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார். எனவே விரைவில் 'எனை நோக்கி பாயும் தோட்டா ' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.