புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (21:08 IST)

விஜய்யுடன் போட்டி போடுவேன்: இமான் அண்ணாச்சி!!

நடிகர் விஜய் தமிழ் கதாநாயகர்களுள் முன்னணியில் இருப்பவர். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். அதிலும் அவரது நடனத்திற்கு திரை உலகை சேர்ந்த பலரும் ரசிகர்களாய் இருக்கின்றனர். 
 
இந்நிலையில், இமான் அண்ணாச்சி நடனத்தில் விஜய்யுடன் போட்டி போடுவேன் என தெரிவித்துள்ளார். அதாவது, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த படத்தில் இமான் அண்ணாச்சி ஒரு அரசியல்வாதியாக நடித்து வருகிறார். படத்தில் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள பாடல் ஒன்றுக்கு, இமான் அண்ணாச்சி நடிகை ஒருவருடன் நடன்மாடியுள்ளார். 
 
தனது நடனம் பற்றி இமான் அண்ணாச்சி தெரிவித்தாவது, எனக்குள் இப்படியொரு திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறி வருகிறாராம்.